Friday 3 May 2013

பசு தெய்வம்

                                  பசுமாடு புனிதம் என்று நான் நினைப்பதில்லை, ஆனால் அதன் மீது மிகுந்த மதிப்பு உண்டு, எந்தவித பலனும் பாராமல் நமக்கு பாலை தருவதால் சிலர் அதை தாய்க்கு ஈடாகப் போற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு, பால் சைவமா ? பால் கன்றுக்குத் தானே, அதையே நீங்க திருடி குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களில் எவரும் மாட்டு இறைச்சியையோ, வேறு எந்த விலங்கின் இறைச்சியையோ உண்ணாதவர்கள் இல்லை, பசுவதைப் பற்றி விவாதங்கள் வரும் போது எதிர் தரப்பு 'பசும் பால்' பற்றிய கேள்வியை எழுப்பி பசுவிடம் பால் சுரப்பது கன்று குட்டிக்குத் தானே ? என்று கேட்பர். பசுக் கொலைகள் என்பதில் நான் புனிதத்துவத்தை முன்னிறுத்தி தடுக்க விரும்பியதில்லை, மாறாக அதன் மூலம் பெற்ற பாலிற்கான நன்றிக்கடன் என்ற அளவில் அவற்றை கொல்லாமல் விட்டால் என்ன என்றே கேட்பதுண்டு. பசுவைப் பொருத்த அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுபவை, மற்ற வீட்டு விலங்குகளுக்கு இருப்பது போல் காம்புகளின் எண்ணிக்கையையும் மடியையும் ஒப்பிட, பசுவிடம் சுரக்கும் பால் அதன் இனவிருத்திக்கு மறைமுகமாக உதவுவதற்கு வளர்ப்பவர்களுக்கு இரண்டு காம்பு, கன்றுக்கு இரண்டு காம்பு என்றே அமைந்திருக்கும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு பல காம்புகள் அமைந்திருந்தாலும் அவை ஈனும் குட்டிகளுக்கு அவை சரியாகவே இருக்கும், தவிர அவற்றை பயன்படுத்தி மனிதனுக்கு பழக்கம் இல்லை, உபரியான பால் என்பதை உற்பத்தி செய்வதில் மாடும், அடுத்து ஆடும் உள்ளன, சிலர் ஆட்டின் பாலையும் விரும்பிக் குடிப்பார்கள், அவற்றை ஆடு இழப்பதால் குட்டிகளுக்கும் பெரிய இழப்பு இல்லை, காரணம் கன்று குட்டிகளைப் போல் அன்றி ஆட்டுக் குட்டிகள் பிறந்த அடுத்த நாளே புல்லை சுவைக்கக் கற்றுக் கொள்ளும்,என்பதால் ஆட்டின் பாலைக் கறப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

                                 பசு இரண்டு கன்றுகள் போடுவது எப்போதாவது நடைபெறுவது தான், மரங்கள் தன் இனவிருத்திக்கு விதையை மூடியிருக்கும் பழத்தை இலவசமாகக் கொடுப்பது போல் பசுக்களின் பரிணாமத்தில் பால் உற்பத்தி என்பது கன்று அருந்தும் அளவை விட மிகுதியானது, குறிப்பாக மனிதர் உள்ளிட்ட விலங்கினங்கள் அனைத்திற்கும் பலவகையான சுரப்பிகள் உண்டு, குறிப்பிட்ட பருவகாலங்களில், சுரப்பிகள் தூண்டுதலில் வர உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் பொழுது அவை தொடர்ந்து வேலை செய்யும், பால், தேன், மனித உமிழ் நீர் மற்றும் அனைத்து சுரப்பிகளும் அதன் உற்பத்தியை செய்து கொண்டு தான் இருக்கும், எனவே  இரத்தம் தான் பாலாக மாறுகிறதா, தேனாக மாறுகிறதா என்பதவிட சுரப்பிகள் சுரப்பதற்கு  இரத்தம் எரிபொருளாக பங்காற்றுகிறது என்பதைத் தவிர்த்து, இரத்தம் தான் பாலாக மாறுகிறது எனவே சைவ விரும்பிகள் அதை குடிப்பது தவறு என்பதை நான் புறம் தள்ளுவேன், தீவிர பவுத்த சைவர்கள் இரத்தம் தான் பால் என்று கருத்தில் சோயா பாலைத்தான் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்குகிறார்கள். நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடே என்றாலும் உடலில் அதன் மூலம் உற்பத்தி ஆவது இரத்தம் தான் என்பதால் இது குறித்த கருத்துகளை புறம் தள்ள முடியும். பசு மட்டுமல்ல காளையின் உடல் அமைப்பும் அதன் உறுதியான மேல் கழுத்தும் உழவு செய்வதற்கு அதனைப் பூட்டுவதற்ப உறுதியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு லாபம் தர அவைகளால் முடியவில்லை என்றால் அவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்திருக்கவும் மாட்டார்கள்.


                                 மற்றபடி பசு தெய்வம், என்பதையோ புனிதம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்வதில்லை, பால் கொடுக்கும் உயிர்களில் தாய்க்கு அடுத்து பசு வருவதால் அதன் மீது மதிப்பு உண்டு, எங்கள் வீட்டில் ஒரே வேளையில் நான்கு பசுமாடுகள் வரை வளர்த்திருக்கிறோம், எங்க ஊரில் உடமையாக பசு வைத்திருக்து பால் கறந்து குடிப்பது ஒரு மதிப்பு என்று பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள், வீட்டுக்கு பயன்படுத்தியது போல் 'சாஸ்திரத்திற்கு' என்று கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு விற்பார்கள், கறந்த பாலை அப்படியே கொடுத்தால் நல்லது இல்லையாம், என்கிற முட நம்பிக்கையும் பெற்றோர்களுக்கு உண்டு, சென்ற முறை ஊருக்குச் சென்ற பொழுது மாடுகள் ஒன்றையும் காணும், ஏன் என்று கேட்க, அவற்றை பராமரிக்க முடியவில்லை என்று அம்மா சொன்னாங்க, அம்மாவுக்கு பசு மாடு லஷ்மி என்ற நம்பிக்கை உண்டு, மாடுகளுக்கு லஷ்மி, சரஸ்வதி என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள். இன்றும் கூட வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதை வளக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள், சாணக் கரைசல் ஒரு கிரிமி நாசினி என்றே சொல்லப்படுகிறது, பெரும்பாலும் களி மண் சுவர்களையும் தரையையும் கொண்ட குடிசை வீடுகளில் சாணம் கரைத்து மொழுகுதல் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. அந்த காலத்தில் வீடுகளைச் சுற்றி புதர்கள் இருந்ததால் சாண வாசனை போகும் வரைத ஊர்வன மற்றும் பூச்சி வகைகள் வீட்டுக்குள் வராது என்பதற்காக மாதம் ஒருமுறையேனும் வீட்டை மொழுகுவது பெண்களின் வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தது. பசு மாடு லக்‌ஷிமி என்கிறீர்களே வளர்த்ததில் எதாவது ஒரு பசு மாட்டையாவது அவை வயதாகி சாகும் வரை வளர்த்திருக்கிறீர்களா ? நான்கு ஈற்றுகள் முடிந்த பிறகு வேறு எங்காவது இரண்டாம் ஈற்று என்று விற்றுவிடுவது தானே வழக்கம், வாங்கியவர்கள் அதை கேரளாவுக்கு தானே கொண்டு செல்வார்கள், என்று கேட்டதற்கு அம்மாவிடம் இருந்து வந்த பதில் 'அதோட தலையெழுத்து நாம என்ன செய்ய முடியும் ?' என்பதே, பசுமாடு வளர்ப்பவர்களின் அனைவரும் நிலைகளும் இது தான். இதைப் பார்க்கும் பொழுது பசுவின் மீது கட்டப்படும் புனிதத்தை அதனை நம்புவர்களே மீறிவிடுகிறார்கள் என்னும் போது மற்றவர்கள் பசுவை அடித்து திண்பதில் நாம் என்ன குறை சொல்ல முடியும் ?


                                 பசுக்களை அடிமாடுகளாக மாற்றுவது அதனை வளர்த்தவர்களின் செயலே அன்றி அதனை வாங்குபவர்களோ, வெட்டி திண்பவர்களோ கிடையாது, கைவிடப் பட்ட மாடுகள் தான் அடிமாடுகள் ஆகின்றன. எருமையும் தானே பால் கொடுக்கிறது, அதனை ஏன் புனிதமாகக் கருதாமல் எமனாகக் கருதுகிறார்கள், நம் மனதில் இருக்கும் கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதனை இழிவு படுத்திப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சியும் தான், தமிழர்களில் பெரும் விழுக்காட்டினர் கருப்பு நிறம் தான் என்பதால் தமிழர்களுக்கு எருமை மாடுகளை எமனாகக் காட்டுவதற்கு தகுதியே கிடையாது.

                                 அந்த காலத்து ஆட்கள் எல்லாவற்றையும் மதித்தார்கள், போற்றினார்கள் என்று பொத்தாம் பொதுவாக பலர் கூறுவதும், நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், பசு புனிதம் என்று நம்பப்பட்ட காலங்களில் சிறுநகரங்களிலும், சிற்றூர்களிலும் (கிராமம்) ஊருக்கு ஒன்றாவது கால்நடை பட்டி உண்டு, இந்தப் பட்டிகள் பெரும்பாலும் ஆடுமாடுகளை அடைத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், அடுத்தவர் வயலில் இறங்கி மேயும் போது அவை பிடிபட்டால் பட்டியில் ஒப்படைக்கப்படும், பட்டி நடைமுறைகள் ஆடுமாடுகளுக்கு உடைமையானவர்கள் அவற்றிற்கு நஷ்ட ஈடு தலையாரி யிடம் கொடுத்து அவற்றை விடுவிக்க வேண்டும், விடுவிக்கும் வரை பட்டியில் அடைக்கப் பட்ட ஆடுமாடுகள் பட்டினிதான், அப்படி பட்டினி போட்டு அடைத்து வைத்திருப்பது 10 நாட்கள் வரை தொடரும், அதற்குள் உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக ஆக அவற்றை ஏலம் விடுவார்கள், ஏலம் எடுப்பவர்கள் ரூ 20 க்கும் 30க்கும் ஏலம் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வழி தவறி வந்த ஆடுமாடுகள் தான் மீட்பவர் வரும் வரை பட்டினி கிடக்க நேரிடும். இது எவ்வளவு கொடுமை பாருங்க, தான் செய்தது தவறே என்று அறியாத விலங்கினங்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப் படும் ஆடுமாடுகளில் ஈனும் நிலையில் உள்ளவைகளும் கூட உண்டு, எங்கள் வீட்டு மாடு ஒரு முறை பின் தொடையில் ஆழமான பேனா கத்தி கீரலுடன் வந்து சேர்ந்தது, எங்கு சென்றது யார் கீறினார்கள் என்றே தெரியவில்லை, பேச இயலாத உயிர்களை முன்பு வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறார்கள், அதற்கு பதிலாக அவற்றை ஒரு நிமிடத்தில் வெட்டி இறைச்சி ஆக்குவது அவற்றிற்கு செய்யும் கொடுமைகளில் மிகவும் குறைவானது தான். முன்னோர்களெல்லாம் தவறு செய்யாதவர்கள் அவர்கள் விலங்குகளிடம் எவ்வளவு அன்பு செலுத்தி இருக்கிறார்கள் பாருங்கள், இன்றைக்கு புளுகிராஸ் அமைப்புகள் பெருகியதால் பட்டிகள் மறைந்துவிட்டன, ஆனாலும் அடிமாட்டு விற்பனைகளுக்கு குறைவே இல்லை.

                                 இன்றைய மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க பசுவிடம் பால் எந்திரம் வழியாகத்தான் கறக்கப்படுகிறது. எந்திரங்கள் உறிஞ்சும் போது மாடுகளுக்கு ஏற்படும் வலி கூடுதல் ஆனதே.

                                 பசு புனிதம் என்று கூறுவதால் அவற்றை போற்றத் தேவையில்லை, ஆனால் அவற்றின் பலன் பெற்ற நன்றி உடையவர்கள் என்பதால் அதனைப் போற்றுவதில் தவறு இல்லை. பசுவதைகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கையும் வதைப்பது மிகப் பெரிய தவறு அதற்கான உரிமையும் நமக்கு இல்லை. இன்றைக்கு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வெளிநாடுகளில் மாடுகள் பெருகியதே ஓசோன் படலம் விரிந்ததன் காரணமாகச் சொல்கிறார்கள், மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், சாணங்களை உடனடியாக உரமாக மறுபயீனீடு செய்யாமல் அவற்றை தேக்கி வைத்திருப்பதாலும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமலும் கொட்டுவதால் அவற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் அளவும் மிகுதி. மாடுகள் உற்பத்தியை, மாட்டுப் பண்ணைகளை குறைத்துவிட்டால் பனிப் பகுதிகளின் ஆயுளை கூட்டி, கடல் நீரால் உலக அழிவு என்கிற பேரபத்தையும் தள்ளிப் போடலாம்.

                                 மாடுகளை கொன்று திண்பவர்களை விட, செத்தமாடுகளை உண்பவர்கள் தாழ்வானவர்கள் இல்லை, ஏனெனில் மாடுகள் இன்னார் உண்ணுவார்கள் என்பதற்காக இறப்பதில்லை, மாடுகளின் பாலைக் குடிப்பதில் தவறு இல்லை, மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு , அது போல் மாட்டு இறைச்சிகள் உண்பது தவறு இல்லை, ஆனால் தவிர்க்கலாம், போதிய இறைச்சிகாக அதன் உற்பத்தியை கூட்டுவதும் தவறே, அதன் எதிர் பலனை நாம் தான் அனுவிப்போம்.

                                 'பிஸ்மில்லா' என்று சொல்வது கூட மாடுகளைக் கொல்வதன் கட்டுப் பாடுகள் குறித்தது, ஆனால் கறியின் சுவையில் அதனை உரிமையாக்கிக் கொ(ள்)ல் கிறார்கள். விலங்கினங்களை கொல்வது தவறு என்கிற கருத்து இல்லை என்றால் அவற்றை கொல்லும் போது பிஸ்மில்லா சொல்வதும், அவற்றை அப்படி சொல்லப் பட்டதை மட்டுமே 'ஹலால்' என்று சொல்வதும் கூட தேவையற்றது தானே.

கண்ணாடி பயிற்சி


                              அறிவியல் இல்லாது வேதாத்திரியம் இல்லை. இவ்விளக்கங்களிலும் இவ்வுண்மையே வெளிப்படுகின்றது.

                              எந்த ஒரு பொருளிலே நாம் காந்தத்தைக் குவிக்க வேண்டியிருப்பினும், அப்பொருள் அங்கே எந்திரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகின்றது.
எந்திரம் என்பதைக் உன்னித்துக் காணும் போது நிகழும் காந்தச் சேகரிப்பு மிகுதியால், மனம் நடு மன நிலைக்கு [உயிர் மீது நிலைத்தல்] தானாகவே நகரவல்லது. நடு மனத்துக்கு நகர்த்த வல்ல, காந்தச் சேகரிப்புக்கு உறுதுணையாய் அமைய வல்ல ஒரு ஊடகத்தை கவனமாக பராமரித்தல் அவசியம்.

                              நமது முறையிலே கண்ணாடித்தவம் என்பது இராமலிங்கர், நமது மஹானுக்கு சூக்குமமாக உணர்த்திய தந்திரங்களில் ஒன்றாகும். இராமலிங்கர் தான் சிறுவனாக இருந்த போது படிப்பிலே கவனம் செலுத்தாமையால், தம் மூத்த அண்ணணுடன் பிணக்குற்று, வீட்டின் ஒரு அறையில் மட்டுமே தங்கி, அண்ணன் வரும் போது அவர் எதிரே வராத வண்ணம் இருந்து வந்தார். அந்த அறையிலே தனியாய் அமர்ந்து அண்ணனிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக பாடங்களில் கவனத்தை ஊன்றிக்கொண்டிருந்தார் என்று அவரது குடும்பமே நம்பிக்கொண்டிருந்த போது, அவரோ, அங்கு ஒரு கண்ணாடியை நிறுவி, அதற்கு சாம்பிராணி யிட்டு, அதை பலமணி நேரம் உன்னிப்பாகப் பார்த்துகொண்டிருந்தார். அவ்வாறு பார்த்துக் கொண்டே முருகக்கடவுளை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், அவரது மனமே முருகனாய் நின்று பின் அவரதுமனவுருவமே அக்கண்ணாடியில் அவருக்கு பிரசன்னமானது. மேலும் இவ்வாறு பல மணி நேரம் கண்ணாடிப் பயிற்சியில் ஈடுபட்டதும், அவரது சீவகாந்தம் காலத்தால் திணிவில் மிகுந்து, ஒளி எனும் காந்தத் தன்மாத்திரையாக மாற்றமடைந்து, 'ஒளியுடலார்' எனும் பெயரை அவர் பெறக்காரணமாயிற்று.

                              1. காந்தகச் சேகரிப்பு எந்திரத்தின் உதவியால் மிகுந்து சீவகாந்தப் பெருக்கம் ஏற்படும். பெருக்க மிகுதியால் காந்தம் தன்னுடைய தன்மாத்திரையில் உயர்ந்து ஒளியாகக் கூடத் தோற்றமளிக்கலாம், அதுவும் சாத்தியமே நமக்கு.

                              2. காந்தச் சேகரிப்பு, உயிர் உணர்தலை, உயிர் அறிதலாக, உயிர்கலத்தலாக மாற்ற வல்லது. இந்த நிலையிலே மனம் 14-40 அலை நிலையிலிருந்து 7-14 அலை நிலைக்குள் தானாகவே வழுக்கி உட்புகுந்து விடும். இந்த நிலையில் மனம் எதை நினைக்கின்றதோ அதுவாகவே மாற்றமடையும், நாம் கண்ணாடியில் நமது பிம்பத்தை நம் மனம் முழுக்க நிறைந்த மகானது வடிவமாகவே காணலாம், இதுவும் நிகழும்.

                              1. எந்திரத்தின் பயன்: ஒரு பொருள் இருக்கின்றதென்றால், அதைப் பார்க்கும் போது அதன் பயன்பாடுதான் நம் மனதில் ஓடவேண்டும். ஒரு ஆடை இருக்கின்றது, அதைக் காணும் போது அதன் பயன் உடலை காப்பதே எனும் எண்ணம் தான் எழவேண்டுமேயன்றி, என்ன அழகாக பளபளப்பாக இருக்கின்றது இந்தச் சேலை, எனும் எண்ணம் நம் மனதில் ஓடினால் அது சரியா? அது போலத்தான், கண்ணாடித்தவத்துக்கு வைக்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது அதன் பயன்பாடு மட்டுமே நம் மனதில் எழவேண்டும். அதற்கு கலர் கலராக ஃபிரேம் செய்து வைத்தால், அதைப் பார்க்கும் போது அந்தக் கலர்தான் மனதில் ஓடுமேயன்றி கண்ணாடியின் பயன் பற்றிய எண்ண அலை நம் மனதில் எழுமா? முதல் தேவை எளிமை மற்றும் பயன்பாடு குறித்த சிந்தனையாலமைந்த அமைந்த தேர்வு.

                              2. சூக்கும சரீரத்தின் அளவு: உங்களது துவாதசாங்கம் என்பது ஒரு ஒன்றரை அடி அளவுக்கு துரியத்திலிருந்து உயர்ந்து நிற்க வல்லது, துவாத சாங்கத்தில் தங்கும் காந்தமும் கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்க வேண்டுமல்லவா, அதனாலே வாங்கிய கண்ணாடி உடலையும், உடலினின்று ஒரு ஒன்றரை அடியளவையும் காட்டவல்லதாய் இருப்பதே நலம். இல்லாவிடில் காந்த மிகுந்த நிலையில் கண்ணாடியின் பயன் கேள்விக்குறியாகிவிட வல்லது.

                              3. எந்திரத் தூய்மை: உடற் தூய்மை, உள்ளத்துக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. எந்த ஒரு எந்திரத்தின் தூய்மையும் அதை பயன்படுத்துவோருக்கு பயிற்சியில் ஆழ ஊக்குவிப்பாய் அமைய வல்லது. ஆகவே, கண்ணாடியை தூய்மையாய் வைத்திருத்தல் அவசியம்.

                              4. எந்திரக்குக் காப்பு: காந்தம் குவிக்கும் பொருள் எதுவாயினும், அதை அவசியப்படாதோர் எண்ண அலைகளிலிருந்து புறமாக வைப்பதே நல்லது. அந்த விதத்தில் இந்தக்கண்ணாடியை நடு வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டலாகாது. அதை எடுக்கும் போதும் அருட்காப்பு அவசியம்  வைக்கும் போதும் அருட்காப்பிடுதல் நலம்.

                              5. எந்திரத்தில் குவிப்பு: காந்தம் கையில் மிகுதியாக சேகரிப்படைந்த நிலையில், அது தானாய் வெளியேறி ஓடாத வண்ணம், மஹான் கையுறை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தது போன்று, காந்தம் மிகுதியாக உங்கள் கண்ணாடியில் சேகரிப்படைந்த நிலையில், அதற்கு உறையிடுதலே நலம். அது குவிந்த காந்தத்தை இழப்பின்றி தேக்கி வைக்க வல்லது.

                              6. குறித்த காலம்: நமது காந்தக் களம் எல்லா நேரங்களிலும் தூய்மையாக அமைய வல்லது. எனினும் கண்ணாடி எனும் எந்திரம் நமது காந்தக் களத்தை மட்டுமே பிரதிபலிப்பதில்லை. அது நம்மைச் சுற்றியுள்ள வான் காந்தக் களத்தையும் [புவியை ஒட்டிய பகுதி] பிரதிபலிப்ப தால், அந்தக் களம் எந்த நேரத்தில் தூய்மையாக இருக்கின்றதோ, அந்த நேரத்திலேதான் கண்ணாடியை இட்ட உறையினின்று வெளியே எடுத்து நம் பயிற்சியைத் துவக்க வேண்டும். அதாவது கண்ணாடிப் பயிற்சி எனும் தந்திரம், பிரும்ம முகூர்த்தில் மட்டுமே செய்யப் பட வேண்டியது. மற்ற நேரங்களில் அந்த எந்திரத்தை எதையும் பிரதிபலிக்கா வண்ணம் சுவரை நோக்கியதாய் உறையிட்டு வைத்தலே நலம்.

கடைசியாக,
                              7. கண்ணாடி வாங்கியது எதற்கு? புதுசா நிறைய காசுகுடுத்து செருப்பு வாங்கிருக்கேன் சார், அதனால தான் சார், நான் அதை காலிலே அணியாது கையிலே வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றேன் என்பது போன்று சில பேர், கண்ணாடி தவம் செய்ய கண்ணாடி வாங்கிருக்கேன் சார், பரணிலேயே வைத்துப் பூட்டியிருக்கின்றேன், எதோ அது பெரிய எந்திரமாம், பத்திரமாய் வைக்கணுமாம், என்ற நினைப்பிலே அதைப் பயன்படுத்தாமலேயே வைத்திருப்பது, விலையுயர்ந்த செருப்பு வாங்கி தலைல வச்சிகிட்டு நடந்த கதைதான்.


எச்சரிக்கை
கண்ணாடி பயிற்சி அதிக ஈர்ப்பு கொண்டது. இதில் பால் கவர்ச்சியும் அடக்கம் எனவே பழக்க வழக்கங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.இது ஜகவசியத்தின் பலனும் கூட.இயற்கையாகவே நம் கண்ணாடியின் முன் நம்மை அழங்கரித்து கொள்வதும் கண்ணாடிப்பயிற்சியின் பலன் தரும்.எனவே அருட்கப்பியில்லாமல் தொடங்கவே முடிக்கவே கூடாது.