Sunday 13 January 2013

இரத்ததானம் மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!

மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!
இரத்ததானம்:

Read more about இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை! [2027] | மருத்துவ கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.
ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.
அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 1216 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்
முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:
மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:
தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.
தூய இரத்தம் – 35 நாட்கள்
இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
இரத்தத் தட்டுக்கள்5 நாட்கள்
பிளாஸ்மா1 வருடம்
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.
இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.
இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!
இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!
.கா. செய்யது இபுராகிம்,
அமைப்புச் செயலாளர்,
ஸ்பீடு இரத்த தான சேவை மையம்,
கடையநல்லூர்.

இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை!
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com
ண்பர் செய்யது இப்ராஹீம் எழுதிய "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன்.

இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்.
இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்டுவதாக இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சியைத் தூண்டும் விதமாக இருக்க கூடாது. ஆனால், இக்கட்டுரை முழுக்க முழுக்க உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

மனித குலத்திற்கு மட்டுமே உணர்ச்சி வசப்படும் நிலை உள்ளது. இப்படி உணர்ச்சி வசப்படும் போதுதான், அதில் உள்ள தீமைகளை அல்லது தில்லுமுல்லுகளை ஆராயாமல் மனித குலம் தவறு செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை எனது கடமையாக கருதுகிறேன்.

இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது
                         என்றால்,
 மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே
                                                      ஏன்?

சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம்  செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால்,
                     எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

                                          பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.

               மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை.                                                                                                         அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்?
இதற்கு செய்யது இப்ராஹீம் போன்றோர்கள் எதற்காக துணை நிற்கிறார்கள்?

கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது,

             உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது
ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு செய்யது இப்ராஹீம் போன்ற தன்னார்வலர்கள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால்,                                                                                                   ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா? இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது?

ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?

நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்? ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?

ஏழை எளிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க,                                                                           மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு                                           லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே!? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?

இதேபோல, புதிதாக உற்பத்தியாகும் சுமார் அரை லிட்டர் புது இரத்தம் ஏற்கனவே உடலில் அசுத்தமாக உள்ள ஐந்தரை லிட்டர் இரத்தத்தோடு சேர்ந்து அவைகளையும் புது இரத்தமாக்கி விடுகிறது என்பது எவ்வளவு புத்திசாலித்தனமான கட்டுக்கதை.

அது சரி, புது இரத்தம் சுரந்துதான் புத்துணர்ச்சி தருகிறது என்றால், இரத்ததானம் செய்பவர்கள் எல்லாம் புத்துணர்ச்சி இல்லாதவர்களா? அவர்களின் இரத்தம் அசுத்தமானதா? அசுத்தமான இரத்தத்தை எதற்கு தானமாக எடுத்து ஆபத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்? எப்படி காப்பாற்ற முடியும்?

இதனால், நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் சரியல்ல. 400 மில்லி இரத்த இழப்பால் நமக்கு பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அதே அளவிற்கு இரத்தம் சிந்தும்போது ஏன் சுய நினைவை இழந்து மயக்கமடைகிறார்கள்?

நாம் கொடுக்கும் 400 மில்லி இரத்தத்தால் நம் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பது உண்மையானால், விபத்தில் சிக்குபவர்கள் அல்லாதோருக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் இரத்தத்தை அந்நோயாளியிடமே எடுத்துக் கொள்ளலாமே!

எனவே, 400 மில்லி இரத்தம் நம் உடலிலிருந்து இழப்பது நிச்சயமாக நம் உடலுக்குக் கெடுதியானதே. எப்படி?

இரத்தம் கொடுக்கும் ஒரு சிலருக்கு உடனடியாக மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறையே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், மயக்கம் உடலுக்கு மிகவும் நல்லது என்று எந்த மருத்துவமும் சொல்வதில்லையே!

உண்மை இப்படி வெட்ட வெளிச்சமாக இருக்கும் போது, மயக்கமடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட தான இரத்தத்தை அவருக்கே திரும்ப செலுத்தி விடுவதுதானே தானத்தின் நியாயம். ஆனால், அப்படி ஒருபோதும் செய்வதில்லையே!

மயக்கம் ஏற்பட்டால் உடனே காலைத்தூக்கி பிடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்இரத்ததானம் செய்யும் இடத்தில் மயக்கம் வந்தால் காலைத்தூக்கிப்பிடித்து தற்காலிகமாக காப்பாற்றி விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதற்காகத்தான் சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அங்கேயே 200 மில்லி குளிர்ச்சியான செயற்கை பானம் மற்றும் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை உண்ண வைத்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை இவ்வெற்று சம்பிரதாய சடங்குக்கு முடிந்து அவ்விடத்தை விட்டு சென்ற பின் ஒருவர் மயக்கம் போட்டால், அவர் இரத்ததானம் கொடுத்ததால்தான் மயக்கம் போட்டார் என்பதையும், அவரைக்காப்பாற்ற காலைத் தூக்கி பிடிக்க வேண்டும் என்பதும் யாருக்கு தெரியும். இல்லை அவரேதான் முன்னெச்சரிக்கையாகவோ சொல்லி வைக்க முடியுமா அல்லது மயக்கத்தின் ஊடே எழுந்து சொல்ல முடியுமா?

தானம் செய்தவரை டாஸ்மார்க் தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறான் பார் என்றல்லவா போவோர் வருவோர் நினைப்பார்கள். திட்டி தீர்ப்பார்கள்.

கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மரத்துப்போய் குத்தும், குடையும் என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் பல முறை அனுபவபூர்வமாகவே உணர்ந்து இருக்கிறோம் அல்லவா? இரத்த ஓட்டத்தை சரி செய்து மரத்துப் போனதை திரும்பவும் சாதாரண நிலைக்கு கொண்டுவர அத்தருணத்தில் வலியால் என்ன பாடுபடுகிறோம். அம்முயற்சி துவங்கிய பின்னர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரை ஆகிறதுதானே!?

கை, கால் மரப்புக்கே இப்படிப்பட்ட விளைவு என்றால், மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஏன் மருத்துவர்களின் மூளையைப் போல் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட நமது மூளை மட்டும் ஏன் மறுக்கிறது?

இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால், புண்ணியம் தேடி இரத்ததானம் கொடுத்தவர் புகலிடம் தேடி சாவை சந்திக்க வேண்டியிருக்கும். அல்ல அல்ல. இப்படி நிச்சயமாக நடந்திருக்கும். சாலையில் சென்றவர் சுருண்டு விழுந்து செத்தார் என்ற செய்தியை படித்திருக்கிறோம் அல்லவா? அச்சாவுகள் இந்தவகையைச் சார்ந்தது அல்ல என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? இப்படி சாவை சந்தித்தவர்களின் புள்ளி விபரங்கள் யாருக்கு தெரியும்!

இதுபோன்றதொரு நிலமையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரத்ததானம் கொடுப்பவர் தக்க பாதுகாவலர்களோடு வர வேண்டும் என மருத்துவத்துறை இன்று வரையிலும் கூட அறிவுறுத்தியது இல்லை. இப்படி அறிவுறுத்தினால் யார் இரத்ததானம் செய்ய முன்வருவார்கள்? என்ற அடிப்படை காரணம் இதில் இல்லாமலும் இல்லை.

இரத்ததானம் செய்தவரின் உடல் நிலையைப் பொறுத்து சோர்வு ஏற்படும். இது எப்படிப்பட்ட பலம் கொண்டவராக இருந்தாலும் நிச்சயம் என்பதை நானே உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், உடனே மயக்கம் அடையாத இரத்ததான கொடையாளர்கள் தங்களின் சோர்வுக்கும், உடல் ஒத்துழையாமைக்கும் தானம்தான் காரணம் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியாது.

நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் உடல் நலம் தேற சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கிறது. இதனாலும் மருத்துவத்துறைக்கே லாபம்.

ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.

மேலும், தானமாக பெறப்படும் இரத்தத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஊழலும் நடக்கிறது. ஆனால், அப்படி என்ன நடக்கிறது என்பது எனது அறிவுக்கு இன்னும் விளங்கவில்லை. விளங்கியதும் விளக்குகிறேன்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி (கிறித்துவ நண்பனின் மனைவி) விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை  உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை  காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி()பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

இதுபற்றியெல்லாம் நண்பர் செய்யது இப்ராஹீம் உட்பட உங்களில் எவராவது ஆய்வு செய்தது உண்டா? முடிந்தால் இதற்கான பதிலை இக்கட்டுரைகளின் ஊடே பதிவு செய்து, மீள்பதிவு செய்யலாமே!
- வாரண்ட் பாலா
+1 # ashfa 2012-11-18 01:19
@Warrant Balaw

என் ஒரே கேள்விக்கு பதிலளியுங்கள்
உங்களிற்கு தலசீமியா நோயுள்ள ஒரு 3 வயது குழந்தை உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
( தலசீமியா என்றால் அசாதாரணமான குருதி இரத்தக்கலம் காணப்படுவது. பொதுவாக பரவிக்க்காணப்படும் ஒரு பரம்பரை வியாதி. அந்த குழந்தைகளிற்கு குறைந்தது ஒரு கிழமைக்கு ஒரு தடவை, குறைந்தது 1 பைன் - 400 ml இரத்தமாவது பாய்ச்ச வேண்டும்.சிலவேளை 2/3 கூட தேவைப்படலாம் இல்லாவிடில் உயிர் வாழ்வது கேள்விக்குறி. ஒரு குழந்தைக்கு தலசீமியா இருந்தால் மற்ற குழந்தைகளிற்கும் அது இருக்கும் சாத்தியம் மிக மிக அதிகம்)
உங்கள் குழந்தைகளில் ஒன்றுக்கு மட்டும் தான் தலசிமியா என்று வைத்துக் கொள்வோம். ஒரு கிழமைக்கு ஒரெ ஒரு பைன் இரத்தம் தான் தேவை என்போம். உங்கள் குழந்தை 1வருடம் உயிர் வாழ வேண்டுமெனில் நீங்கள் 52 உறவினரை அழைத்து வர வேண்டும்/ 6 மாதத்திற்கு ஒரு தடவை இரத்தம் தந்தால் 28 பேர் வேண்டும். மிக முக்கியம் உங்கள் குழந்தையின் அதே குரூப் இரத்தமாக இருக்கணும். அதுவும் சில வேளை சில டோனர்களின் அதே குரூப் இரத்தம் கூட குழந்தைக்கு அலர்ஜிக் ஆக்கி விடும். அப்பதான் அது 4 வயது வரை உயிருடன் இருக்கும். அதற்கப்பால்.....????? நீங்க என்ன செய்வீர்கள்? எப்படி 1000க்கணக்கான தலசீமியா நோயாளர்கள் உயிரோட இருக்காங்க என்று சொல்ல முடியுமா? அதுவும் ஒரே குடும்பத்தில் 2/3 நோயாளர்கள் இருந்தால்.....???


0 # Warrant Balaw - Researcher in Law, Writer, Critic 2012-11-18 08:42
கட்டுரையின் சாரத்தை உணரும் திறன் உங்களுக்கு இல்லை. நான் எழுதியுள்ள எதையும் ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியால் இப்படி ஒரு கற்பனை கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். இரத்த தானத்தின் மூலம் பெறப்படும் இரத்தம் நீங்கள் கற்பனையில் சொல்வதுபோல் நடந்தால் கூட மிகவும் சந்தோஷமே! எத்தனை குழந்தைகள் அப்படி இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரத்தை தாருங்கள்.

நான் யாரையும் ரத்ததானம் செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. உற்றார், உறவினர், நண்பர்கள் என தேவைப்படும் போது செய்யுங்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். தேவையில்லாமல் செய்யாதீர்கள் என்றும், அதனால் வரும் விளைவுகள் குறித்தும்தான் எச்சரித்துள்ளேன். உங்களைப் போன்றவர்கள் செய்யத்தான் போகிறார்கள். இதனால், அவர்களுக்குத்தான் நட்டம்.


0 # ashfa 2012-11-20 23:44
//எத்தனை குழந்தைகள் அப்படி இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரத்தை தாருங்கள்//
பொதுவாக உலக சனத்தொகையில் 3% தலசீமியா நோயாளிகள். பார்க்க
en.wikipedia.org/.../...
www.who.int/.../en
நான் உதாரணத்திற்கு தான் தலசீமியா என்றேன். சிக்கிள் செல் அனீமியா குழந்தைகள் இவர்களை விட அதிகம். இன்னும் எத்தனையோ வகை குருதிச்சோகை நோயாளிகளும், கேன்சர் நோயாளிகளும் இரத்தத்திற்காக வருகிறார்கள். அவர்களிடம் கேளுங்கள், இரத்தத்தின் பெறுமதி அவர்களிற்கு தான் தெரியும்.

//நான் யாரையும் ரத்ததானம் செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. உற்றார், உறவினர், நண்பர்கள் என தேவைப்படும் போது செய்யுங்கள்//
உங்களிற்கு தேவையானவர்க்கு மட்டும் கொடுத்தால் இவங்களிற்கு யார் கொடுப்பார். இது போல தேவையுடையவர்க்கு உற்றார், உறவினர், நண்பர்கள் கொடுத்தாலும் போதாது.

நீங்கள் மற்றவர்கு கொடுக்காது உங்கள் உறவினரிற்கு மட்டும் கொடுங்க. யாரும் கேட்கல. அடுத்தவங்கள ஏன் தடுக்குறீங்க.




0 # ashfa 2012-11-18 01:24
@ Warrant Balaw

நன்மை செய்வோம்! தீமையை தடுப்போம். நம்மால் அது முடியாவிடின் அவற்றை செய்பவரை ஆதரிப்போம்.
அதுவும் முடியாவிடின் மெளனமாக இருப்போம்.
எதற்காக நலவு செய்பவரை தடுக்கின்றீர்கள்


0 # Warrant Balaw - Researcher in Law, Writer, Critic 2012-11-18 08:49
Quoting ashfa:
@ Warrant Balaw

நன்மை செய்வோம்! தீமையை தடுப்போம். நம்மால் அது முடியாவிடின் அவற்றை செய்பவரை ஆதரிப்போம்.
அதுவும் முடியாவிடின் மெளனமாக இருப்போம்.
எதற்காக நலவு செய்பவரை தடுக்கின்றீர்கள்


நன்மையை சொல்லுவோம். தீமையை தடுப்போம் என்பதே எனது கட்டுரையின் பொருள். சொன்னதை கேட்காமல் தீமையை செய்து செத்தால் அவற்றையும் நாம் வரவேற்காமல் இருக்க முடியாது. ஆதலால், தாராள மனதோடு வரவேற்கிறேன்.


0 # அமீன் 2012-01-14 22:32
Quoting syed liyakath ali:
thavaraana thagaval melum vivarangalukkukku @


அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் செய்யது லியாகத் அலி,

நான் ரெகுலராக இரத்ததானம் செய்பவன். இக்கட்டுரையில் சகோதரர் பாலா எழுப்பியுள்ள சில கேள்விகள் எனக்கும் நியாயமானவைகளாக தெரிகின்றன. இனிமேல் தேவைக்கு இல்லாமல் வெறுமனே தானம் செய்வது கூடாது என்று நானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

சகோதரர் பாலாவின் கட்டுரையிலுள்ள தவறான தகவல்
எது என்ற விளக்கத்தை இங்கேயே நீங்கள் கூறினால் என்னைப்போன்று குழப்பத்திலுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.


0 # இராஜகிரியார் 2012-03-20 00:26
இரத்தம் கொடுப்பது கேடு. இரத்தம் பெறுவது அதை விட கேடு என்று அகுபஞ்சர் போன்ற மாற்று மருத்துவங்களின் எச்சரிப்பை நாம் மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான் மருத்துவர்கள் கொடுப்பதில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம். அவசர தேவைக்கான தீர்வையும் அம்மருத்துவங்கள் கூறாததால் திரு. பாலா கூறுவது போல் தேவை படும் போது மட்டும் இரத்தம் கொடுக்கலாம். அதே போல் சகோ. சாகுல் கூறுவது போல் தானம் கொடுக்க விரும்புபவர்களின் முகவரி, குருப் போன்ற விவரங்களை மட்டும் சேகரித்து வைத்துக் கொண்டு தேவையின் போது மட்டும் பயன் படுத்திக் கொள்ளலாம்.. தமிழகத்தின் சில இயக்கங்கள் போட்டி போட்டு கொண்டு - மக்களின் உடல் நலன் குறித்து சிந்திக்காமல் - இரத்த தான முகாம் நடத்துவதுவதை கண்டு நான் வருந்தியதுண்டு.




+1 # .கார்த்திகேயன், அக்குபஞ்சர் ஹீலர். 2012-04-10 15:56
நண்பர் வாரண்ட் பாலா சொல்லுவது சரியே, ஆம் நண்பர்களே இரத்ததானம் செய்வது என்பதில் எந்த அறிவுபூர்வமான விசயமும் இல்லை, ஏன் என்றால் எந்த உடலும் மற்றவர் உடலில் உள்ள இரத்தத்தை ஏற்காது என்பதே உண்மை. [அப்படி என்றால் மற்றவர் உடல் உறுப்புகளை எப்படி ஏற்கும்..? அதுவும் நிச்சயம் மருத்துவத்தின் கையாலாகாத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. ஒரு உறுப்பை சரி செய்ய முடியா விட்டால் அதனை வெட்டிவிட்டு மாற்று உறுப்பு வைப்பதும் வீண் வேலையே. மேலும் விளக்கம் பெற என் வெப்சைட் rkacu.webs.com/.../ இல் உள்ள டாக்டர்.புரூஸ் லிப்டன் அவர்களின் "உணர்வுகளின் உயிரியல் - Biology of Perception" உரைகள் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.] இரத்ததானம் செய்வது என்பதில் ஆங்கில மருத்துவத்தின் அறியாமையே வெளிப்படுகிறது. அதற்கு உதாரணம், உடல் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஒரே இரத்த குரூப் உள்ள ஒருவரின் இரத்தத்தை மற்றவர் உடலில் ஏன் மருந்துகள் கலந்து ஏற்ற வேண்டும். "நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும்" என்று கூறப்படுவது உண்மையானால் தேவை அதிகம் உள்ள உடலில் ஏன் அந்த இரத்தம் தானாகவே சுரக்காது. இரத்தம் பெற்றுகொண்டவர்களுக்கு ஏன் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இன்னும் இதில் மறைக்கப்படும் உண்மைகள் எத்தனை.. எத்தனை ...?


+3 # மருத்துவர்..உமர் பாரூக் 2012-04-11 08:33
மிக முக்கியமான கட்டுரை நண்பரே! மருத்துவ உலகம் சில விஷயங்களை எதிர் கேள்விகளற்றுச் செய்து கொண்டிருக்கிறது. பொது மக்கள்தான் அதற்கு பலியாகிறார்கள். இப்படியான மாற்றுச் சிந்தனைகள் மூலம் தான் உண்மைகளைக் கண்டறிய முடியும்.

நான் ஒரு இரத்தவியல் துறையின் முன்னாள் விரிவுரையாளன். சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

# மனித ரத்த செல்களின் ஆயுள் 180 நாள் முதல் 220 நாட்கள்தான். அப்புறம் புதிய செல்கள் தானாகப் பிறக்கும். அப்படி தினமும் பிறக்கிற புதிய செல்கள் தான் தோன்றுகிற உடலுக்கு ஏற்ப உருவாகிறது. உதாரணமாக சளி தொந்தரவுள்ள ஒரு நபருக்கு உருவாகிற ரத்த செல்கள் அந்த சளியை வெளியேற்றும் எதிர்ப்புசக்தியோடு (இம்யுனோகுளோபின்) பிறக்கும். இந்த ரத்தத்தை இன்னொரு நபருக்கு ஏற்றினால் அவர் உடலில் உள்ள ரத்தத்தோடு பொருந்தாது. சில நாட்களில் அந்த ரத்தம் வெவ்வேறு வழிகளில் கழிவுகளாக வெளியேறிவிடும்.

# மனித உடலில் அந்நிய பொருட்களை செலுத்த முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி அதை எதிர்த்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படி பிறரின் ரத்தத்தை ஒருவர் உடலில் செலுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்க ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மனிதனுக்கு சக்தியைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிற ரத்ததை ஏற்றுகிற போது எதற்கு ஒவ்வாமை ஏற்படுகிறது?

# ரத்ததானம் பெறப்படும் இடத்தில் ஒரு தகவல் வைக்கப்பட்டிருக்கும். சுமார் 2 யூனிட் ரத்தம் தானம் செய்பவருக்கு இரண்டொரு நாட்களில் ஊறிவிடும் என்று. இயல்பான மனிதருக்கே இப்படி ஊறிவிடும் என்றால், அடிபட்டு ரத்தம் தேவைப்படும் நபருக்கு இன்னும் அதிகமாகத்தானே ஊறும்? உடல் அவசரத்தேவைகளின் போது அதிகமாக வேலை செய்யும்.

...இப்படி ரத்தம் பற்றிய அடிப்படை உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலோட்டமாக ரத்ததானம் மிகப்பெரிய சேவையாக கொண்டுசெல்லப்படுகிறது. ஒரு ரத்தத்தை இன்னொருவருக்கு ஏற்ற வேண்டுமென்றால் சுமார் 2000 ரூபாய்க்கு டெஸ்டுகள் செய்ய வேண்டும். அதுவும் [நீக்கப்பட்ட சொல்]க் காய்ச்சல் டெஸ்ட் எல்லாம் செய்தால் ரூ.3000 கூடுதல் செல்வாகும். இவ்வளவு தொகையை செலவு செய்து நாம் தானம் செய்கிற ரத்தத்தை டெஸ்ட் செய்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? நேரடியாக ரத்த வங்கிகளில் விலைக்கு வாங்கினால் 1 யூனிட்டின் விலை ரூ.800 தான். அப்படி என்றால் இந்த ரத்தம் டெஸ்ட் செய்யப்பட்டிருக்குமா? பொய்யான தகவல்களால் நோயாளியை மேலும் நோயாளியாக்குவதும், உடல்நலமுள்ள நபர்களை நோயாளிகள் பட்டியலில் சேர்ப்பதும் தான் ரத்ததானத்தின் வேலை.

- மருத்துவர்..உமர் பாரூக்


0 # Heartly 2012-04-27 11:08
ஆங்கில மருத்துவத்தின் கையாளாக தன்மையே இந்த இரத்த மாற்று சிகிச்சை முறை என்று நினைக்க தோன்றுகிறது . இரத்த மாற்று சிகிச்சை முறை வருவதற்கு முன் மண்ணில் மனிதன் எவ்வளவோ காலம் வாழ்ந்து கொண்டு இருந்தான். பண்டையகால மருத்துவ முறையில் உடல் உறுப்பு மற்றும் இரத்த மாற்று சிகிச்சை என்பதே இல்லை. ஆனால் மனிதன் பூரண ஆயுள் என்று 300 வருடங்களுக்கு மேலாக இருந்தான் என்று வரலாறு கூறுகிறது . இன்று பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் என்று ஆகி விட்டது . ஆக ஆங்கில மருத்துவம் ஒரு பூரண மருத்துவம் அல்ல. அவர்களின் தப்பித்து கொள்ளும் மனப்பான்மையை காட்டுகிறது. தகவல்களுக்கு நன்றி .


0 # Pavalar Pon.Karuppiah 2012-05-01 20:41
குருதிக்கொடையின் நன்மை தீமை பற்றிய அருமையான அலசல் வரவேற்கத் தக்கது. அறிவுப் புர்வமான விளக்கமளித்த நண்பர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி.
சாதாரண மக்களைக் குருதிக்கொடையளிக்கக் கோரும் மருத்துவரோ மருத்துவப் பணியாளர்களோ அவசரக் காலத்தும கூட கொடையளிக்க முன்வராதது ஏன்? என்பது கோடிப் பொன்பெறும் கேள்வி.


+1 # .கார்த்திகேயன், அக்குபஞ்சர் ஹீலர் 2012-05-05 19:39
நண்பர்களே, சிலர் நம்முடைய கட்டுரைகளையும், கமெண்ட்களையும் ஏதோ ஆங்கில மருதவத்தின் மேல் உள்ள வெருப்பாலேயே எழுதுவதாக நினைகின்றார்கள். அவர்களுக்கு ஒரு ஆங்கில மருத்துவ துறையை சேர்ந்தவர் பதில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே கீழ் உள்ள வெப்சைட் சென்று படித்து பார்த்தாவது உண்மையை உணர முயற்சி செய்யுங்கள்... ஏன் என்றால் மருத்துவம் ஒற்றை தன்மை உடையது அல்ல, ஆங்கில மருத்துவம் செய்வது எல்லாமே சரி நினைக்கும் சிலருக்கு இது உதவும். நன்றி.
www.foolproofcure.net/.../ அல்லது www.foolproofcure.net/.../ இவற்றை படித்த பின்பாவது ஆங்கில மருத்துவத்தின் முட்டாள் தனத்தை உணர முயற்சி செய்யுங்கள்...


0 # Rasik 2012-05-29 14:16
இதே கேள்விகள் எனக்குள் பல நாட்களாக தோன்றியிருக்க இன்று வாரன்ட் பாலா அவர்களின் கட்டுரை மூலம் தெளிவுபெற்றது ......

நன்றி பாலா அவர்களே !


+1 # அப்துல் காதர் 2012-10-23 11:35
இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை..!

rkacu.blogspot.com/.../...

இந்த கட்டுரையை தொகுக்க உதவிய சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி.


+1 # உம்மு இப்றாஹீம் 2012-11-06 09:43
திரு.பாலா அவர்களுக்கு,

உங்களின் கட்டுரையோடு முழுக்க முழுக்க உடன்படுகிறேன். இதற்கு காரணம் நான் சுயமாக சந்தித்த சில உடல்நல குறைபாடுகள். பாலி டெக்னிக்கில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் கணக்கிலடங்கா ரத்த தானங்கள் செய்துள்ளேன். வேலை செய்யும்போதும். இரத்த தான கிளப்பின் செக்கரெட்டரியாகவும் இருந்துள்ளேன். ஆனால் ஒரு தடவை கூட தேவை என வந்த நிலையில் இல்லை,. எல்லாமே முகாம்களில். சமூக சேவை, நாம்தானே முன்னே நின்று செய்ய வேண்டும் என்ற பொதுநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு. அவ்வப்பொழுது என் உடல் நலத்தில் குறைபாடுகள் ஏற்படும் வேளைகளில் எல்லாம் என் அன்னை என்னை திட்டிக்கொண்டே இருப்பார்.... இரத்த தானம் செய்வதால்தான் என்று. 9 வயதில் சின்னமையை தவிர வேறு எதற்கும் டாக்டர் என்று போய் நிற்காத நான் பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டிலிருந்து மாதமொருமுறை ஏதேனும் காரணத்திற்காக மருத்துவரை அணுகுவது என்பது சாதாரணமாகிப் போனது. அப்பொழுதும் என் புத்தியில் எட்டவில்லை. ஆனால் முதல் குழந்தை சுகப்பிரசவம், 27 வயதில்... தாய்ப்பாலுக்கு எந்த ஒரு குறையுமில்லை. 2 வயது வரை தாய்ப்பாலில் வளர்ந்தான். ஆனால் 2 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அடுத்தவனுக்கோ மூன்றே மாதத்தில் தாய்ப்பால் நின்று போனது. மீறி குடுக்க முயற்சித்தால் உடம்பின் ஒரு பக்கமே சில மணி நேரங்களுக்கு மரத்துப் போய் எழுந்திருக்க முடியாமல் கிடக்க ஆரம்பித்தேன்... பின் அவனுக்கு supplement. அதன் பின் 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைக்கும் இரண்டே மாதத்தில் தாய்ப்பால் நின்று போனது. இவை மட்டுமில்லை... கல்லூரி முடியும் தருவாயில் தைராய்டு டிடெக்ட் செய்யப்பட்டதும் ஒரு அதிர்ச்சியே. தவிர கல்லூரி முடிந்த பின்னாடியிருந்து உடம்பின் ஏதாவதொரு பாகம் அவ்வப்பொழுது மரத்துப் போவதும், கால்கள் எந்த காரணமுமே அன்றி அவ்வப்பொழுது யானைக்கால் போல வீங்கிப் போவதும் ஆனால் மருத்துவ பரிசோதனைகளில் எதுவுமே தெரியாமல் போவதும் என எல்லா அதிர்ச்சிகளையும் தாண்டிய பின் இப்பொழுதெல்லாம்தான் என் சிந்தனை சுயநலமற்று நான் செய்த இரத்த தானத்தின் மீது போகிறது. இளமையில் துடிப்பாகவும், சத்து நிறைந்தும் இருக்கும் அந்த இரத்தத்தை தானமாக வாரி இறைத்ததால்தானோ என்று சில காலமாக நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.... உங்களின் இதே கட்டுரையைப் போலவும் சிந்தித்து வருகிறேன்.... என்ன செய்ய??? என்னால் முடிந்தது இளம் வயதினர்க்கு, முக்கியமாக இளம் பெண்களுக்கு தேவைப்பட்டாலொழிய, அவசர தேவை இல்லாமல் இரத்த தானம் செய்யாதீர்கள் என்று சொல்ல மட்டுமே முடிகிறது. இது என்னுடைய தனி அபிப்பிராயமோ என்றே நினைத்திருந்தேன்... ஆனால் இல்லை... இது போல் பலரும் சந்திக்கிறார்கள், சிந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்..... எனக்கு பதில் கிடைக்காத ஒரே கேள்வியை எங்கே கேட்பது என்று இன்னமும் தெரியவில்லை..... எப்படி வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் முகாம்களின் மூலம் கிடைக்கும் இரத்தங்களை ஸ்டோரேஜ் செய்கிறார்கள்???? அது overstock ஆகிவிட்டால் என்ன செய்வார்கள்???? எப்படி டிஸ்போஸ் செய்வார்கள்??? அப்படி ஒரு நிலை வராமல் இருக்க என்ன வழிமுறைகளை கையாளுகிறார்கள்?????

இறைவனே அறிந்தவன். தங்களின் கட்டுரைக்கு நன்றி.


0 # Warrant Balaw - Researcher in Law, Writer, Critic 2012-11-08 07:58
சகோதரியே, நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட, இனி எப்படி ஆரோக்கியமாக இருப்பது என்று சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இது குறித்து நான் உங்களுடன் விரிவாக பேச வேண்டியுள்ளது. ஆனால், இதற்கு இது இடமல்ல என்பதால், தங்களின் உலாப்பேசியுடன் எனது முன்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள். (சந்தி) (சிந்தி) (சாதி)க்கலாம்.

நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது. அதை எழுதுவதால், பல்வேறு சர்ச்சைகள் உருவாகும் என்பதால்தாம் கட்டுரையிலேயே எழுதவில்லை. மேலும், மக்களின் சிந்தனைக்கு இதுவே போதுமானது. மீறினால், அதற்காக நாமென்ன செய்ய முடியும்...!


0 # Munzi 2012-11-06 10:35
*********** ********** ******

உணர்ச்சி வசப்பட்டு எழுதியது அவரோ இல்லையோ கண்டிப்பாக நீங்கள் தான்.

காயப்பட்டால் மட்டுமே இரத்தம் தேவை என்றில்லை. வேறு அறுவை சிகிச்சை நடக்கும் போதும், இரத்த புற்று நோயின் போதும் இரத்தம் தேவைப்படுகிறது.

அதைத் தவிர ஆராய்ச்சிக்கும் இரத்தம் தேவைப்படுகிறது.

இரத்தத்தை சும்மா எல்லோரிடமும் எடுக்க முடியாது. பாதிப்பேருக்கு இரத்தம் ஃபிட் இல்லை என்பது தான் உண்மை. உடல் நிறை மட்டுமே இரத்தம் கொடுக்கப் போதுமானதில்லை. சில தொற்றுக்கள் இருக்கின்றதா என்று டெஸ்ட் செய்ய கொஞ்சம் பணம் செலவாகும்.

அதை விட இரத்தம் கொடுத்த ஒரு வாரத்திலேயே இரத்தம் சுரந்துவிடும். இரத்தம் கொடுத்துவிட்டேன் என்று நாலு வேளையும் முட்டையும் பாலும் முழுங்கினால், உடல் தடித்துப் போவது நிச்சயம். இரத்தம் கொடுத்த மறு நாளே ஓட்டப் போட்டிக்குப் போனவர்களையும் எனக்குத் தெரியும். ஏன், நானே இரத்தம் கொடுத்த அரை மணி நேரத்தில் 3 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டி இருக்கிறேன்.

இரத்தம் எடுக்கும் அந்த கொஞ்சம் நேரம் தலை கிறு கிறுக்கும். சில மணி நேரம் கூட சிலருக்கு இருக்கும். அது சாதாரண விடயமே.

ஆண்களிடம் மட்டுமே 450 மில்லி எடுப்பார்கள். பெண்களிடம் 250 மில்லி தான் எடுப்பார்கள். ஆனாலும் நாங்கள் வாதாடி 450 கொடுத்திருக்கிறோம்.

பீரிசலில் இரத்தத்தை சேமிக்கலாம் என்றாலும், அவசர தேவைக்குப் பாவிக்க முடியாது. அதனால் பிரிஜ்ஜில் தான் வைப்பார்கள். அப்படி வைக்கும் இரத்தத்திற்கும் குறைந்த அளவு ஆயுட் காலமே 35 - 45 நாட்களே. பாவிக்காத இரத்தம் வீணாகப் போகும். வேறு வழி இல்லை.

இரத்தம் கொடுத்த பைலட் கிட்டத்தட்ட 2-3 நாட்கள் விமானத்தை ஓட்டமுடியாது. அதே போல் தான் மருத்துவர்களும், நர்சுகளும். அவர்கள் இரத்தம் கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு முக்கியமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எப்போது அவசர சிகிச்சை நடக்கும் என்று தெரியாத பட்சத்தில் மருத்துவமனை ஆட்களால் இரத்தம் கொடுக்க முடியாது. அவர்கள் இரத்தம் கொடுத்த அன்று பலத்த காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், நோயாளியின் நிலை என்ன?

//இரத்ததானம் செய்தவர் மயக்கம் போட்டு விழுந்து கிடப்பதை, தண்ணியடித்து விட்டுதான் விழுந்து கிடக்கிறார். போதை தெளிந்ததும் எழுந்து விடுவார் என்ற தெளிந்த சிந்தனையில் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றால்//

குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர் அருகே போகும் போது வரும் நாற்றம் இரத்ததானம் செய்தவர் அருகே போகும் போது வருவதில்லை.


0 # இராஜகிரியார் 2012-11-06 11:30
//ஆராய்ச்சிக்கும் இரத்தம் தேவைப்படுகிறது.//

ஆராய்ச்சிக்கு எதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர்கள்?

//அதை விட இரத்தம் கொடுத்த ஒரு வாரத்திலேயே இரத்தம் சுரந்துவிடும்//

பிறகு ஏன் 6 மாதங்களுக்குள் மீண்டும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவுரை?

//
இரத்தம் எடுக்கும் அந்த கொஞ்சம் நேரம் தலை கிறு கிறுக்கும்//

இரத்தம் கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்றால் கொடுத்தவுடன் முன்பை விட புத்துணர்வு அல்லவா வர வேண்டும். பிறகு ஏன் கொஞ்ச நேரம் கிறுகிறுக்க வேண்டும்?

//இரத்தம் கொடுத்த பைலட் கிட்டத்தட்ட 2-3 நாட்கள் விமானத்தை ஓட்டமுடியாது. அதே போல் தான் மருத்துவர்களும், நர்சுகளும். அவர்கள் இரத்தம் கொடுத்தால் இரண்டு நாட்களுக்கு முக்கியமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது.//

இரத்தம் கொடுப்பது ஆரோக்கியம் என்றால் பைலட்டால் ஏன் 2-3 நாட்களுக்க விமானம் ஓட்ட முடியாது?

இரத்தம் கொடுப்பது ஆரோக்கியம் என்றால் ஏன் மருத்துவர்களாலும் நர்சுகளாலும் 2 நாட்களுக்கு காயங்களுக்க சிகிச்சை அளிக்க முடியாது?

//ஆண்களிடம் மட்டுமே 450 மில்லி எடுப்பார்கள். பெண்களிடம் 250 மில்லி தான் எடுப்பார்கள். ஆனாலும் நாங்கள் வாதாடி 450 கொடுத்திருக்கிறோம்.//

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ள போது எதற்காக இந்த பாகுபாடு?

//இரத்தத்திற்கும் குறைந்த அளவு ஆயுட் காலமே 35 - 45 நாட்களே. பாவிக்காத இரத்தம் வீணாகப் போகும்.//

இவ்வாறு சேமிப்பதால் வீணாகிவிடும் போது-இலட்சோப இலட்சம் பேருடைய ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு எதற்காக ஆயிரக்கணக்கான லிட்டர்கள் சேமிக்க வேண்டும்?

//வேறு வழி இல்லை//

அப்படியா? யார் சொன்னது உங்களுக்கு? நீங்கள் என்னென்ன வழிகளில் சிந்தித்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?

//குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர் அருகே போகும் போது வரும் நாற்றம் இரத்ததானம் செய்தவர் அருகே போகும் போது வருவதில்லை.//

இந்த அளவிற்கு யோசிக்கும் உங்களிடமிருந்து கீழ்கண்ட அறிவுப்பூர்வமான கேள்விகள் எப்படி?

//எப்போது அவசர சிகிச்சை நடக்கும் என்று தெரியாத பட்சத்தில் மருத்துவமனை ஆட்களால் இரத்தம் கொடுக்க முடியாது. அவர்கள் இரத்தம் கொடுத்த அன்று பலத்த காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், நோயாளியின் நிலை என்ன?//

எல்லா மருத்துவமனைகளுக்கும் தினமும் யாராவது பலத்த காயங்களுடன் சேர்க்கப் படுவார்களா?
மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவரும் ஒரே ஒரு நர்சும் மட்டும் தான் இருப்பார்களா?

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் இரத்தம் கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் யாராவது சொன்னார்களா?


//WHAT NONSENSE?//


மற்றவர்களை கூறும் முன் நாம் SENSE உடன் தான் உள்ளோமா என்று உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.


0 # Munzi 2012-11-06 15:07
விதண்டாவாதமாக கேள்வி கேட்டால் புத்திசாலி என்று நினைப்பா? எழுத ஒரு இடம் கிடைத்தால் என்ன வேணுமானாலும் அந்த Columnல் fill பண்ணுவது தான் உங்கள் வேலையா?

//ஆராய்ச்சிக்கு எதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர்கள்?//

ஆராய்ச்சிக்கு மட்டும் என்று சொல்லவில்லை.

இரத்தத்தை 35-45 நாட்களே பாதுகாக்க முடியும்.

அதைவிட இரத்த புற்று நோய்க்கு எவ்வளவு இரத்த மாற்றம் தேவை என்று தெரியுமா? ஒரு தடவை மாற்றினால் மட்டும் போதாது. குறிப்பிட்ட வாரத்தில் திருப்பவும் மாற்ற வேண்டும். GET EDUCATED DUDE.

வெள்ளம் வந்த பிறகு அணை கட்ட முடியாது. தேவையானதுக்கு கொஞ்சம் அதிகமாகவே (கவனிக்க கொஞ்சமே - நிறைய அல்ல) என்று சேமித்து வைப்பது தவறில்லை. தேவை வந்த பின்னர் ஓடித்திரிவதில்லை பிரயோசனமில்லை.

//பிறகு ஏன் 6 மாதங்களுக்குள் மீண்டும் கொடுக்க வேண்டாம் என்ற அறிவுரை?//

****** ********* . மூன்று மாதம் போதும். ஆனால் நல்ல ஃபிட்டான இரத்தம் (பிட்டான ஆளிடம் தான் ஃபிட்டான இரத்தம் என்றில்லை) உள்ள ஒருவரிடல் தேவைப்பட்டால் ஓரிரு தடவைகள் ஓரிரண்டு மாத இடைவெளியில் எடுப்பார்கள். கலவர பூமியில் வாழ்ந்ததால் தேவைக்காக 45 நாட்கள் இடைவெளியில் இரத்தம் கொடுத்த பலரும் ஆரோக்கியமாகவே இருக்கிறோம். ஏதோ எல்லா இரத்தத்தையும் குடிக்கும் வம்பயர் போல மருத்துவர்களைச் சொல்வது irritating to the max.


//இரத்தம் கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்றால் கொடுத்தவுடன் முன்பை விட புத்துணர்வு அல்லவா வர வேண்டும். பிறகு ஏன் கொஞ்ச நேரம் கிறுகிறுக்க வேண்டும்?//
உடல் பயிற்சியும் தான் உடலுக்கு நல்லது. செய்யும் போது களைப்படைவதில்லை. செய்த கொஞ்ச நேரத்திற்கு கொஞ்சம் சோர்வாக இருப்பதில்லை. பிறகு தான் புத்துணர்ச்சி தரும்.

இரத்தம் கொடுத்தால் தான் உடல் நலத்திற்கு நல்லது என்றில்லை. கொடுப்பதால் கெடுதல் இல்லை. புது இரத்தம் ஊற்றெடுக்கும் என்பதை வேணும் என்று தவறாக எடுத்துக் கொள்ளும் விதண்டாவாதம் எதற்கு.

//இரத்தம் கொடுப்பது ஆரோக்கியம் என்றால் பைலட்டால் ஏன் 2-3 நாட்களுக்க விமானம் ஓட்ட முடியாது?இரத்தம் கொடுப்பது ஆரோக்கியம் என்றால் ஏன் மருத்துவர்களாலும் நர்சுகளாலும் 2 நாட்களுக்கு காயங்களுக்க சிகிச்சை அளிக்க முடியாது?//

இரத்தம் கொடுப்பதால் ஆரோக்கியம் என்று எந்த மடையன் சொன்னான்? இரத்தம் கொடுப்பதற்கு தயங்கத்தேவை இல்லை. ஆரோக்கிய குறைவு ஏற்படாது என்றால் உடனேயே ஆராக்கியமானது என்று அர்த்தமா?

இரத்தம் கொடுப்பதால் ஆரோக்கியம் கெடப் போவதில்லை. புது இரத்தம் ஊற்றெடுப்பதால் பயப்படத் தேவை இல்லை என்று சொன்னால்; புது என்றவுடனேயே நல்லது என்று நினைப்பதும், புது இரத்தம் ஊற்றெடுத்தால் தான் ஆரோக்கியம் என்று நினைப்பதும் பாமரத்தனமானது.

//ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ள போது எதற்காக இந்த பாகுபாடு?//
Don't you know about the periods issues. Who is this *******? Seriously.

//இவ்வாறு சேமிப்பதால் வீணாகிவிடும் போது-இலட்சோப இலட்சம் பேருடைய ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு எதற்காக ஆயிரக்கணக்கான லிட்டர்கள் சேமிக்க வேண்டும்? //

ஆயிரக்கணக்கா? ஒரு முகாமில் எடுப்பது 50 லீட்டர் கூட வராது. இதில் எங்கே உங்கள் ஆயிரக்கணக்கு கணக்கு.


-1 # Munzi 2012-11-06 15:08
விழுந்து கிடப்பவனைக் கடந்து போகும் புத்தி எங்களுக்கில்லை. குடித்துவிட்டு கீழே விழுந்து கிடப்பவனை அடையாளம் காண அவனருகே வரும் தூர்நாற்றமே மிகப்பெரிய சான்று. Don't manipulate the issues.


//எல்லா மருத்துவமனைகளுக்கும் தினமும் யாராவது பலத்த காயங்களுடன் சேர்க்கப் படுவார்களா?
மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவரும் ஒரே ஒரு நர்சும் மட்டும் தான் இருப்பார்களா?//

எந்த மருத்துவர் எத்தனை மருத்துவர் தேவை என்பது யாராலும் PREDICT பண்ண முடியாது. அதிக மருத்துவர்களை மருத்துவமனை வைத்திருப்பதும் இல்லை.


FYI:
யார் பதில் சொன்னாலும் சரியாகச் சொல்லுவதை ஏற்காமல் வெட்டி விதண்டாவாதம் எதற்கு.

தமிழர்களின் பின் தங்கிய நிலைக்கு உங்களைப் போன்ற வெட்டி+விதண்டாவாதம் புரிபவர்களே காரணம். தமிழனுக்கு விடிவே கிடையாது என்று உங்களப் போன்றவர்கள் நாளுக்கு நாள் நிரூபிக்கிறீர்கள்.

கேட்கவே மாட்டேன் என்று முடிவெடுத்தவரிடம் பேசுவது சுவருடன் பேசுவதற்கு சமம். .


+1 # இராஜகிரியார் 2012-11-06 16:37
முதலில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை படித்து புரிந்து கொண்டு பேசவும்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். அதை நீங்கள் நிருபிக்கிறீர்கள்.

தமிழனுக்கும் இரத்த தான முகாமுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் எல்லாம்... என்ன சொல்வது? எனது நாகரிகம் தடுக்கிறது.

//FYI:
யார் பதில் சொன்னாலும் சரியாகச் சொல்லுவதை ஏற்காமல் வெட்டி விதண்டாவாதம் எதற்கு.

தமிழர்களின் பின் தங்கிய நிலைக்கு உங்களைப் போன்ற வெட்டி+விதண்டாவாதம் புரிபவர்களே காரணம். தமிழனுக்கு விடிவே கிடையாது என்று உங்களப் போன்றவர்கள் நாளுக்கு நாள் நிரூபிக்கிறீர்கள்.

கேட்கவே மாட்டேன் என்று முடிவெடுத்தவரிடம் பேசுவது சுவருடன் பேசுவதற்கு சமம்.//

அது எப்படி உங்களுக்கு நீங்களே பதில் சொல்லி கொள்கிறீர்கள்.

PS: நான் உங்களோடு விவாதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. தவறை மக்களுக்கு தெளிவு படுத்துவதே எனது நோக்கம்.

Good Bye.


+1 # இராஜகிரியார் 2012-11-06 16:32
Munzi,

உங்களின் மிகவும் நாகரிகமான(?) பதிலுக்கு மிக்க நன்றி.

சொல்வதற்கு பதில் இல்லை என்றால் எதுவும் விதண்டாவாதமாக தான் தெரியும்.

எனக்கு தெரிந்த வரை பல இடங்களில் பல அமைப்புகளால் பல முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் இரத்ததில் ஆராய்ச்சிக்காக எத்தனை சதவீதம் ஒதுக்கப்படுகிறது? கிட்டத்தட்ட 99% முகாம்களில் பெறப்படும் இரத்தத்தில் ஆராய்ச்சிக்கென்று ஒரு துளி கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். பிறகு ஏன் முகாம் நடத்துவதற்கு ஆராய்சியை காரணம் காட்ட வேண்டும்?


//அதைவிட இரத்த புற்று நோய்க்கு எவ்வளவு இரத்த மாற்றம் தேவை என்று தெரியுமா? ஒரு தடவை மாற்றினால் மட்டும் போதாது. குறிப்பிட்ட வாரத்தில் திருப்பவும் மாற்ற வேண்டும். GET EDUCATED DUDE.//

I see. இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், பெறப்படும் இரத்தத்தின் அளவு என்ன-அதில் எத்தனை சதவீதம் அதற்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்பதற்கான புள்ளி விவரத்தினை தந்து விட்டு பேசலாமே.

//தேவையானதுக்கு கொஞ்சம் அதிகமாகவே (கவனிக்க கொஞ்சமே - நிறைய அல்ல) என்று சேமித்து வைப்பது தவறில்லை.//

உங்களை போல் அனேகம் பேர் இரத்தம் கொடுக்க தயாராக இருக்கும் போது 'கொஞ்சத்திற்காக' ஏன் கூவி கூவி அழைக்க வேண்டும்? ஒரு வேளை தேவையை விட இரத்தம் குறைவாக பெறப்படுகிறதோ? அப்புறம் தேவையை எப்படி தீர்மானிக்க முடியும்?

//இரத்தம் கொடுத்த பலரும் ஆரோக்கியமாகவே இருக்கிறோம்//

உங்களை போன்றோர் ஆரோக்கியமாக இருப்பதால் இது சரி என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் இதனால் பாதிக்கப்பட்டோரும் உள்ளனரே. அவர்களை வைத்து இது தவறு என்று ஏன் முடிவு செய்வதில்லை?

//ஏதோ எல்லா இரத்தத்தையும் குடிக்கும் வம்பயர் போல மருத்துவர்களைச் சொல்வது irritating to the max.//

இல்லையே. இதில் ஏதோ வில்லங்கம் உள்ளது என்றும் இது இன்னும் சரிவர பிடிபட வில்லை என்று தானே திரு. பாலா கூறுகிறார்.

//உடல் பயிற்சியும் தான் உடலுக்கு நல்லது. செய்யும் போது களைப்படைவதில்லை. செய்த கொஞ்ச நேரத்திற்கு கொஞ்சம் சோர்வாக இருப்பதில்லை. பிறகு தான் புத்துணர்ச்சி தரும்.//

உடற்பயிற்சி செய்வதும் இரத்தம் கொடுப்பதும் ஒன்றா?

//இரத்தம் கொடுப்பதால் ஆரோக்கியம் என்று எந்த மடையன் சொன்னான்?//

இந்த கட்டுரை எந்த பதிவிற்கான எதிராக எழுதப்பட்டதோ அக்கட்டுரை ஆசிரியரையும், இதற்கு முன் பின்னுாட்டமிட்ட திரு. மதி அவர்களையும் கேளுங்களேன்.


0 # இராஜகிரியார் 2012-11-06 16:32
பெண்கள் சம்பந்தமாக நீங்கள் கூறும் காரணம் தான் என்றால் அது ஏற்க தக்கதே. ஆனால் முதற் கட்டுரையில்

(இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்) என்று குறிப்பிடப்பட்டுள்ளதே. அப்படியானால் சாதாரண நாட்களில் பெண்களிடம் ஏன் 450 மிலி பெறமுடியாது?

உங்கள் வசதிக்காக 24 மணி நேரம் என்பீர்கள், பிறகு 3 மாதம் என்பீர்கள், நான் 6 மாதம் என்றும் படித்திருக்கிறேன். இதில் எது உண்மை?

//ஆயிரக்கணக்கா? ஒரு முகாமில் எடுப்பது 50 லீட்டர் கூட வராது. இதில் எங்கே உங்கள் ஆயிரக்கணக்கு கணக்கு.//

ஒரு முகாமில் 150 லிட்டர் வரை கூட பெறப்பட்டுள்ளது. நான் சொல்ல வந்தது அதுவல்ல. அனைத்து முகாம்களிலும் பெறப்படும் இரத்தத்தை சொன்னேன். நீங்கள் தான் well educated ஆயிற்றே. அதனால் தான் சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

//இரத்தம் கொடுப்பதால் ஆரோக்கியம் கெடப் போவதில்லை. புது இரத்தம் ஊற்றெடுப்பதால் பயப்படத் தேவை இல்லை என்று சொன்னால்; புது என்றவுடனேயே நல்லது என்று நினைப்பதும், புது இரத்தம் ஊற்றெடுத்தால் தான் ஆரோக்கியம் என்று நினைப்பதும் பாமரத்தனமானது. //

இதுநாள் வரை இரத்தம் கொடுப்பது நல்லது-ஆரோக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்த உங்களை போன்றோர் இப்பொழுது அந்தர் பல்டி அடித்து இல்லை-இல்லை அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இறங்கி வந்ததே இக்கட்டுரைக்கு கிடைத்த வெற்றி தான்.

இறுதியாக நான் சொல்ல வருவது,

ஆங்கில மருத்துவம் இரத்த தானம் செய்ய சொல்கிறது. மாற்று மருத்துவங்கள் இது மிகப்பெரும் கேடு என்கிறது. ஆகையால் அனைத்து மருத்துவங்களையும் ஒருங்கிணைத்தே ஒரு முடிவுக்கு வர இயலும்.
இது பற்றி இறுதி முடிவெடுக்க மருத்துவர்களாலும் அரசாங்கத்தாலும் மட்டுமே முடியும் என்பதால் இது குறித்து ஒரு வெளிப்படையான கருத்து பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இரத்தம் கொடுப்பது கேடு என்று மாற்று மருத்துவங்கள் சொன்ன போதும் - அவசர கால தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதற்கான வழிமுறையை அவை கூறாததால் நான் ஏற்கனவே எனது முந்தைய பின்னுாட்டத்தில் கூறியபடி - திரு. பாலா கூறுவது போல் தேவை படும் போது மட்டும் இரத்தம் கொடுக்கலாம். அதே போல் சகோ. சாகுல் கூறுவது போல் தானம் கொடுக்க விரும்புபவர்களின் முகவரி, குருப் போன்ற விவரங்களை மட்டும் சேகரித்து வைத்துக் கொண்டு தேவையின் போது மட்டும் பயன் படுத்திக் கொள்ளலாம்..

கலவர பூமி? இது பற்றி சிந்திக்க வேண்டும். நிச்சயமாக வழி இல்லாமல் இருக்காது.


+1 # இரா. குரு 2012-11-06 11:45
கீழ்க்காணும் சுட்டியில் கட்டுரையாளரின் உண்மைக் கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் முழுத் தகவல் உள்ளது:
www.foolproofcure.net/.../


0 # மதி 2012-11-06 11:48
எது சென்ஸ் எது நான்சென்ஸ் என்பது கருத்துப்பாரிமாற்றத்தில் புரிந்துவிடும்.

இராஜகிரியார் கேள்வி கேட்கும் முன்னர், அவற்றுக்குத் தம்மிடம் பதில் உண்டா இல்லையா என்று ஒருமுறையாவது சிந்தித்து கேள்வி எழுப்பினால் நன்று.

//ஆராய்ச்சிக்கு எதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர்கள்?//

ஆராய்ச்சிக்கும் இரத்தம் தேவை என்றுதான் சொல்லியுள்ளார். ஆராய்ச்சிக்கு மட்டுமே இரத்தம் தேவை என்று கூறினால் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கும்.

//இரத்தம் கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்றால் கொடுத்தவுடன் முன்பை விட புத்துணர்வு அல்லவா வர வேண்டும். பிறகு ஏன் கொஞ்ச நேரம் கிறுகிறுக்க வேண்டும்?//

இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் இருந்துவிட்டு மலம் கழிக்கும்போது தலை கிறுகிறுவென இருக்கும். இது நோயல்ல; உடலிலிருந்து கழிவு வெளியேறும்போது கிடைக்கும் ஆசுவாசம். அதுபோன்றதே இந்தக் கிறுகிறுப்பும். உடலில் கழிவுபெருக்கம் என்பது சிறுநீர், மலம், வேர்வை என்பது மட்டுமல்ல. இரத்தத்திலும் கழிவுகள் உருவாரும். இந்தக் கழிவுகளை வெளியேற்றாமல் வாழ்நாள் முழுவதும் அப்படியே வைத்துக்கொண்டிருப்பதும் உடலுக்குக் கேடுதான்!

//ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ள போது எதற்காக இந்த பாகுபாடு?//

பெண்களுக்கு மாதம்தோறும் இரத்தத்திலிருந்து கழிவு வெளியேற்றப்படுகிறது. இதனால் மாதவிடாய் நிற்கும் காலம் வரை பெண்கள் இரத்தம் வழங்காமல் இருப்பதுதான் அவர்களின் உடல்நலனுக்கு நல்லது.

அப்படியே கொடுக்கவேண்டுமென நினைப்பவர்களிடமிருந்து ஆண்களைவிட குறைவாக எடுப்பதுதானே நல்லது? இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள்?


-1 # இராஜகிரியார் 2012-11-06 12:13
//எது சென்ஸ் எது நான்சென்ஸ் என்பது கருத்துப்பாரிமாற்றத்தில் புரிந்துவிடும்.//

சரிதான். அனைவரும் ஏற்று கொள்ள வேண்டிய விடயம்.

//இராஜகிரியார் கேள்வி கேட்கும் முன்னர், அவற்றுக்குத் தம்மிடம் பதில் உண்டா இல்லையா என்று ஒருமுறையாவது சிந்தித்து கேள்வி எழுப்பினால் நன்று.//

ஒரு விடயத்தை ரெக்கமண்ட் செய்யும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ரெக்கமண்ட் செய்பவர் தான் பதிலளிக்க வேண்டும்.

//ஆராய்ச்சிக்கும் இரத்தம் தேவை என்றுதான் சொல்லியுள்ளார். ஆராய்ச்சிக்கு மட்டுமே இரத்தம் தேவை என்று கூறினால் உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கும்.//

இவ்வாறு பெறப்படும் இரத்தத்தில் எத்தனை சதவீதம் ஆராய்ச்சிக்காக ஒதுக்க படுகிறது என்ற விவரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

//இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் இருந்துவிட்டு மலம் கழிக்கும்போது தலை கிறுகிறுவென இருக்கும். இது நோயல்ல; உடலிலிருந்து கழிவு வெளியேறும்போது கிடைக்கும் ஆசுவாசம். அதுபோன்றதே இந்தக் கிறுகிறுப்பும். உடலில் கழிவுபெருக்கம் என்பது சிறுநீர், மலம், வேர்வை என்பது மட்டுமல்ல. இரத்தத்திலும் கழிவுகள் உருவாரும். இந்தக் கழிவுகளை வெளியேற்றாமல் வாழ்நாள் முழுவதும் அப்படியே வைத்துக்கொண்டிருப்பதும் உடலுக்குக் கேடுதான்!//

நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?

இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்க வில்லை எனில் அதன் பெயர் வியாதி. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீர் மலம் வியர்வை என்பதெல்லாம் இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்ட கழிவுகள். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எதற்காக வெளியேற்ற வேண்டும்?
சரி. வாதத்திற்காக ஒப்பு கொள்வோம். 5 லிட்டரில் 450 மிலி மட்டும் வெளியேற்றி விட்டால் 5 லிட்டரிலும் உள்ள கழிவுகள் வெளியேறி விடும் என்பதை உங்கள் அறிவு ஒப்பு கொள்கிறதா?

சரி இதையும் ஒரு வாதத்திற்காக ஒப்பு கொள்வோம். இவ்வாறு கழிவுடைய இரத்தத்தை பிறருக்கு எப்படி ஏற்றுகிறீர்கள்?

வாழ்நாள் முழுவதும் ஒருவன் இரத்தம் கொடுக்க வில்லையானால் அவன் காலம் முழுவதும் நோயாளியாக தான் இருப்பானா?

//பெண்களுக்கு மாதம்தோறும் இரத்தத்திலிருந்து கழிவு வெளியேற்றப்படுகிறது. இதனால் மாதவிடாய் நிற்கும் காலம் வரை பெண்கள் இரத்தம் வழங்காமல் இருப்பதுதான் அவர்களின் உடல்நலனுக்கு நல்லது. அப்படியே கொடுக்கவேண்டுமென நினைப்பவர்களிடமிருந்து ஆண்களைவிட குறைவாக எடுப்பதுதானே நல்லது? இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள்?//

பிறகு ஏன் munzi கட்டாய படுத்தி கொடுத்தார்? அப்படி கொடுத்தும் அவருக்கு ஒன்றும் ஆனதாக சொல்ல வில்லையே.


0 # Munzi 2012-11-06 15:19
யுத்த பூமியில் ஒரு நாளுக்கு குறைந்தது (சாதாரண நாட்கள் என்று நாங்கள் நினைக்கும் நாட்கள்) 10 பேர். பெண்களிடம் 250 மில்லி எடுப்பார்கள் என்பது பொதுவானது. அதற்காக எடுக்கவே மாட்டார்கள் என்றில்லை. நாங்களாகச் சொன்னால் எடுப்பார்கள். அவ்வளவே.

இரத்தம் கொடுத்த ஓரிரு மணி நேரத்தில் கிணற்றில் தண்ணி அள்ளிக் கொடுத்தும் இருக்கிறோம். "தேவை" என்று வரும் போது மனிதனிற்கு அசுர மனோபலம் வருவது இயற்கை. ரத்தம் கொடுத்துவிட்டு, வீடு திருப்ப நாங்களே சைக்கிள் ஓடிப்போவோம். ஆனால் ஒரு சக மாணவனோ மாணவியோ ரத்தம் கொடுக்காமல் கூட வந்து எல்லோரும் வீடு சேரும் வரை ஓடித்திரிவார். அடுத்த முறை கூடப்போகும் வேலை எனக்கு வரும். பிறகு இன்னொரு தோழி / தோழனுக்குப் போகும். தேவை என்று கொடுக்கும் போது நாங்களும் கொஞ்சம் கவனமாகவே இருந்திருக்கிறோம். ஏனெனில் ஒவ்வொருவர் வீடும் 1 - 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. பயப்படத்தேவை இல்லை என்றாலும், கவனமாக இருப்பதில் தவறில்லை என்பதால் எங்கள் குழுவில் ஒருவர் இரத்தம் கொடுக்காமல் கூட வரும் வேலை செய்வார்.