Thursday 3 January 2013

நல்லதூக்கம் வர

                                        பூண்டு

                               குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான பானங்களைவிட, அதிகம் ஊட்டச்சத்து தரும் டானிக் பூண்டு. அவர்களுடைய தினசரி உணவில் பூண்டு இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். பூண்டு அவர்களது இதயத்தை சீராக செயல்பட வைக்கும். ஞாபக சக்தி கூடும். உடல் பொலிவு பெறும்; பலமும் கூடும். தொண்டை இதமாகி, குரல் இனிமையாகும். கண் பார்வை கூர்மையாகும். நோய்த் தொற்றுக்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும்.

                                வெங்காயச் சாறு

                                 உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்றும் மாயாஜாலத்தை செய்ய வல்லது வெங்காயச் சாறு. தினமும் சில துளிகள் வெங்காயச் சாறு குடித்து வருபவர்களுக்கு இப்படி கெட்ட கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, ரத்தமும் சுத்தமாகும். இதயத்தின் செயல்பாட்டையும் இது சுறுசுறுப்பாக்குகிறது. முறையாக தூக்கம் வராமல் அவதிப் படுகிறவர்கள், வெங்காயச் சாறு குடித்து வந்தால், தூக்கம் இயல்பாகும்.
                               பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவதி தருவது, தலையில் பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. பச்சைவெங்காய சாறு எடுத்து.தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித் தேயுங்கள். அரை மணி நேரம் ஊறவிட்டு, அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.

                   தசை நரம்பு பிரச்சனைகளிற்கு

   பதினைந்து கிராம் பூண்டை தோல் உரித்து, சாறு வீணாகிவிடாமல் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு சுண்டும் வரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தசை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் பறந்தோடிவிடும்.

      செரிமானக் கோளாறு வயிற்றுப் பொருமல்

                                 அரை டீஸ்பூன் மிளகுத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சவும். தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு நன்கு காய்ச்சி, சுண்டவைத்து, அதைக் குடித்தால் உணவு உடனே செரிக்கும். வயிற்றுப் பொருமல் சரியாகும். இந்த மிளகுக் கஷாயம் வயிற்றுப் புண், தொண்டைப் புண் ஆகியவற்றையும் குணப்படுத்தும் அருமருந்து.

                             ஞாபக சக்திக்கு

                                 கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால், அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், ஞாபக சக்தி கூடும். குறிப்பாக பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு உடனடி பலன் தரும் மருந்து இது!

                               வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க 

                              எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு நன்கு கலக்குங்கள். இந்தத் தண்ணீரால் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேளை நன்கு வாய் கொப்புளியுங்கள். இதன் மூலம் சுவாசம் புத்துணர்வோடு இருப்பதுடன், வாய் துர்நாற்றமும் அகல்கிறது.

                               மிதமான சூட்டிலிருக்கும் ஒரு டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மஞ்சள் பாலைக் குடித்தால், ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்கடைப்பு நீங்கும். மூச்சுத்திணறலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிட்டும். இருமலைப் போக்கவும் இது இனிய மருந்தாக உதவுகிறது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றுக்கும் நிவாரணம் தரவல்லது இந்த மஞ்சள் பால். எலும்புகளை வலுவாக்கும் ஆற்றலும் இந்தப் பாலுக்கு உண்டு.

                                 நல்லதூக்கம் வர

                                 இரவில் படுத்ததும் முறையான தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து. வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு அரைத்து, அந்தச் சாறு இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் நேரத்தில் குடியுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு குடித்து வந்தால், அதன்பின் தூக்கம் முறைப்பட்டுவிடும். படுக்கையில் சாய்ந்ததும் கண்களை நித்திராதேவி ஆட்கொள்வாள்.

                                 மன அழுத்தத்திற்கு                             

  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்ப வர்களுக்கு "துளசி டீ" இறுக்கத்தைக் குறைக்கும் மருந்து. 25 துளசி இலைகளைக் கிள்ளி, அவற்றை சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட்டு, மிதமான சூடானதும் அதை வடிகட்டி எடுத்தால் "துளசி டீ" ரெடி. இதைக் குடித்தால் எப்படிப்பட்ட இறுக்கமும் லேசாகும்.


                                   இருமலுக்கு


                               இருமலுக்கு இஞ்சி கைகண்ட மருந்து. ஒரு விரற்கடை இஞ்சியை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கி, அத்துடன் இரண்டு பூண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்துவிடவும். கால் மணி நேரம் கொதிக்கவிட்டு, அதை எடுத்து ஆறிய பிறகு வடிகட்டவும். இதில் அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து, நன்கு கலக்கி அருந்தினால் இருமல் சுவிட்ச் போட்டதுமாதிரி நிற்கும். தொண்டையும் இதமாகும்.

                    குடலை வலுவாக்க மாதுளை

                                வயிற்று உபாதைகளால் அவதிப்படுகிறவர்களின் குடலை வலுவாக்க மாதுளையின் தோல் உதவுகிறது. மாதுளம் பழத்தோலை நன்கு உலர்த்தி, அரைத்துப் பொடியாக்கி, அதை மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். மோர் பிடிக்காதவர்கள், அப்படியே தோலை தண்ணீர் விட்டு அரைத்து, துவையல் போல ஆக்கியும் சாப்பிடலாம்.

                  மாதவிலக்கு பிரச்னைகளுக்கு

                                 பெண்களின் மாதவிலக்கு தொடர்பான பல பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த மருந்து இஞ்சி. பல பெண்களுக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்று வலி அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு மிகக்குறைவாக இருக்கும் அல்லது சுத்தமாகவே இருக்காது. இவர்களுக்கு எல்லாவற்றையும் இயல்பாக்க இஞ்சி கஷாயம் உதவும்.

                               இஞ்சியை பூண்டுப்பல் அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு துண்டுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். அந்தத் தண்ணீர் அரை டம்ளர் அளவுக்கு சுண்டுகிறமாதிரி கொதிக்கவிட வேண்டும். அதில் கொஞ்சம் சர்க்கரையோ, வெல்லமோ சுவைக்காக சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் தீரும்.

                               மாதவிலக்கு சமயத்தில் பெண்கள், சாப்பிடும் உணவில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக்கி, வழக்கமான வலியையும் அவஸ்தையையும் குறைக்கும். சரியான அளவுக்கு உதிரப்போக்கு இருப்பதில்லை என்று கவலைப்படும் பெண்கள், பெருங்காயத்தை நெய்யில் வறுத்து உணவில் சேர்த்து உண்டால், உதிரப்போக்கு இயல்பாகும்.

                              

No comments:

Post a Comment